சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் வயது 38 இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் வேலை முடித்துவிட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது
அப்போது சென்னை கிளாம்பாக்கம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த மினி ஈச்சர் லாரி பக்கவாட்டில் மோதி விபத்து ஏற்பட்டது அப்போது லாரியின் டயர் ஏரி இறங்கியதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார்
பின்பு அக்கம்பக்கத்தினர் விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து
லாரி ஓட்டுனரான ஜெகன்ராஜா (50) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சென்னை கிளாம்பாக்கம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் லாரி மோதி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.!!