பென்னாகரம் - Pennagaram

பென்னாகரம்: காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பெண் மாயம்

பென்னாகரம்: காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பெண் மாயம்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் நாகமரை செல்லும் சாலையில் வசித்து வந்தவர் மூர்த்தி இவரது மனைவி ஜெயலட்சுமி, இந்தநிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று(அக்.31) இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயலட்சுமி பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். மனைவியை பின் தொடர்ந்து சென்ற மூர்த்தி காவல் நிலையம் உள்ளே மனைவி சென்ற பிறகு பஸ் நிலையம் திரும்பி உள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து காவல் நிலையத்தில் பார்த்தபோது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்காததால் பென்னாகரம் காவல் நிலையத்தில் இன்று(நவ.1) புகார் அளித்தார். புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


தர்மபுரி