பென்னாகரம்: புதிய பேருந்து நிலையம் அமைச்சர்கள் திறப்பு
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும்
வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ஆகியோர், நேற்று அக்டோபர் 24 தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கட்டப்பட்டுள்ள சுமார் 5 கோடி மதிப்பிலான பேருந்து நிலையத்தை தொடங்கி வைத்தனர். மேலும் பென்னாகரம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட சுமார் 6 கோடி மதிப்பிளான, பல்வேறு பணிகளையும் தொடங்கி வைத்தனர். மேலும் சுமார் 5 கோடி மதிப்பிளான, பல்வேறு இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன், திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன், மற்றும் அரசுத்துறை அதிகாரிகளும், திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.