ஒகேனக்கல்: நீர்வரத்து அதிகரிப்பு குளிக்க தடை நீடிப்பு

55பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அக்டோபர் 18 நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 20000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையை அடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வார காலமாக மலையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவு விதமாக காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மழை தொடர்ந்து அதிகரிப்பதை அடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க மற்றும் பரிசளில் இயக்க தடை தொடர்ந்து இன்று ஆறாவது நாளாக நீடித்து வருகிறது மேலும் காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய்த்துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி