கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைந்தும் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகள்மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அதன்படி நேற்று மாலை நேற்று வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர் வரத்து இன்று படிப்படியாக உயர்ந்து 18, 000 கன அடியாக உள்ளது 4 ஆம் நாளகாக அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் தடை நீடிக்கிறது
மேலும் இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி ஃபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. காவிரி ஆற்றில் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.