பென்னாகரம்: ஏழை சிறுவனுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்

65பார்த்தது
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சார்ந்த சையத் பாஷா-வாஹிரா தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர், சையத்பாஷா மாற்றுத் திறனாளி என்பதால் அவரை பராமரிப்பதற்காக ஆள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் 2 பிள்ளைகளும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். வாஹிரா தன் கணவனை பராமரித்து வருகிறார். இதனால் குடும்பத்திற்கு போதிய வருவாய் இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் சிறுவன் அப்சர் தினம் தோறும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சென்று, பள்ளிக்கு செல்வதற்குள்ளாக காலை 6மணி முதல் 8 மணிக்குள் விற்பனை செய்துவிட்டு பள்ளிக்கு செல்கிறான். அதில் கிடைக்கும் வருவாயை வைத்து காலம் கழித்து வருகின்றனர்.

இதனைக் கண்டு தனியார் அறக்கட்டளை சார்ந்த சிறுவனது குடும்ப செலவிற்கு தேவையான உதவி செய்வதாகவும், மாதந்தோறும் 7500 உதவி செய்வதற்காக முன் வந்தனர். மேலும் தர்மபுரி ஆட்சியர் கி. சாந்தி சிறுவனை அழைத்து உதவி செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் சொந்த வீடு இல்லை என தெரிவித்தவுடன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தினை மாவட்ட ஆட்சியரின் சார்பில் 50 சதவீதம் செலுத்துவதாகவும், அறக்கட்டளையினரிடம் மீதமுள்ள 50 சதவீத தொகையை செலுத்தினால் உடனடியாக வீடு ஒதுக்கு தருவதாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி