பென்னாகரம்: ஒகேனக்கலில் 28000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

65பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பொழிந்து வரும் கனமழையின் காரணமாக நேற்று மாலை வரை 16, 000 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. நேற்று மாலை கர்நாடகா மாநில அணைகளில் இருந்து உபரிநீர் 10, 000 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 28, 000 கன அடியாக அதிகரித்துள்ளது மேலும், பரிசல் இயக்கவும், நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி