வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தருமபுரி கலை கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்று திரனாளிகள் நலத்துதறை, வேளாமை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர் நலத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 533 பயனாளிகளுக்கு 2 கோடியே 9 இலட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் களத்தில் இறங்கி பணியாற்றி அனைவராலும் பாராட்டபட்ட ஒரே தலைவர் தமிழக முதல்வர் என்றும், நகரபுறத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்குவது மட்டுமல்லாமல் கிராமபுறத்திலும் வாழும் மக்களும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் முதல்வர் செயல்படுகிறார் என தெரிவித்தார். இந்த நிகழ்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி. கே. மணி, வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் அரசு தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.