இந்தோனேசியாவில் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது Pixel போனும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களின் வணிகத்தை கருத்தில் கொண்டு 40% உள்ளூரில் தயாரித்த உதிரி பாகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரை இத்தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ காமர்ஸ் நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டிருந்த போன்களும் விற்பனை தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.