தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது தமிழக கர்நாடக மாநில பகுதிகளில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 28000 ஆயிரம் கன அடியாக இருந்து நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து அக்டோபர் 24 இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 31, 000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது இதை அடுத்து 11-வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசளில் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருவாய் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து கரையோரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.