தலைமை காவலரை தாக்கிய மருத்துவர் கைது
தர்மபுரி நகர பி1 காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் வைகுந்தம். இவர் பிடமனேரி பகுதியில் நேற்று செப்டம்பர் 21 இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் அருண் வேறு ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இது பற்றி தலைமை காவலர் வைகுந்தம் கேட்டுள்ளார். அப்போது அருண், ஏட்டுவை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் தர்மபுரி நகர பி1 காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் அருணை செப்டம்பர் 22 இன்று பிற்பகல் கைது செய்தனர்.