தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (செப்.2) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அடிப்படை தேவைகளான பேருந்து வசதி கழிவுநீர் கால்வாய் வசதி மின்சார வசதி பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம் வாரிசு சான்று வேலைவாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். 540 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.