ராஜாப்பேட்டை மகா மாரியம்மன் கும்பாபிஷேகம் திருவிழா

59பார்த்தது
தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை பஞ்சாயத்து, ராஜாப்பேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது இந்த கோவில் கும்பாபிஷேகம் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து, காலை 7 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, புத்துமண் எடுத்தல், முளைபாரி எடுத்தல், போன்ற பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதைதொடர்ந்து, கலாகர்ஷணம், கணபதி பூஜை, புண்யாக வாசனம், கலச ஸ்தாபனம், கும்ப அலங்காரம், கலச பூஜை, முதல் கால யாக சாலை பூஜைகள், ஹோமங்கள் - பூர்ணாவதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை(செப்.16) காலை 3. 30 மணிக்கு அம்மனுக்கு திருப்பள்ளி எழுச்சி, 2-ம் கால யாகாலை பூஜை, பூர்ணாவதி, திரவ்யாவதி, ஸ்பர்ஸ்வுதி நாடி சந்தானம் யாத்ரா தானம் நடைபெறவுள்ளது.

அதைத் தொடர்ந்து, காலை 6 மணிக்கு கலச குடம் புறப்பாடு, விமானம் அபிஷேகம், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நவக்கிரகம் மற்றும் மஹா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி