தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் லில்லி புஷ்பம் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 2000 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 5 வருடம் பணி முடித்த குறு அங்கன்வாடி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், அதேபோல் 10 வருடம் பணி முடித்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், அதே போல் உள்ளூர் பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும், ஏற்கனவே பதவி உயர்வு வழங்கபட்ட குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்திட வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய மாநில செயலாளர் பேச்சு வார்த்தையில் அழைத்து பேசிய மாவட்ட திட்ட அலுவலர் இந்த மாவட்டத்தில் ஏற்கனவே 5 வருடம் பணியாற்றி அங்கன் வாடி பணியாளர்கள் 1 குழுவிற்கு பதவி உயர்வு வழங்கபட்டுள்ளது. ஆனால் பணியிடங்கள் காலியாக இல்லாததால் அப்பணியை நிறுத்தி வைக்கபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.