பாப்பிரெட்டிபட்டி - Pappireddipatti

தர்மபுரி: கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

தர்மபுரி அருகே குப்பூர் பெரிய குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள 85 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டதாக தகவல் அறிந்தாக தர்மபுரி தீயணைப்பு மீட்பு படையினர் நிலைய அலுவலர் சந்தோசம் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கோகுல் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அவருடைய உடலை கயிறு கட்டி இழுத்து மீட்ட தீயணைப்பு படையினர் நகர காவல் நிலைய காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர் கிணற்றில் தவறி விழுந்தாரா.? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தர்மபுரி நகர காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


தர்மபுரி
Feb 06, 2025, 02:02 IST/அரூர்
அரூர்

தர்மபுரி: இருசக்கர வாகன விபத்து இளைஞர் உயிரிழப்பு

Feb 06, 2025, 02:02 IST
சேலம் மாவட்டம் மேச்சேரி தெப்பக்குளம் வீதியை சேர்ந்த ராஜா மகன் விக்னேஷ் என்பவர், நேற்று மாலை விக்னேஷ் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் தர்மபுரியில் இருந்து மேச்சேரி நோக்கி சென்றதாக தெரிகிறது. அப்போது தொம்பரகாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் திடீரென மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு விக்னேஷ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.