தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று செப்டம்பர் 21 இரவு நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் நகர செயலாளர் தென்னரசு ஏற்பாட்டில் நடந்தது. இதில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும் தற்போதைய பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கேபி அன்பழகன் தலைமை வகித்தார்.
அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர். நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக அனைத்து இடங்களிலும் அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற களப்பணி ஆற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு தெரிவித்தனர். மேலும் அதிமுக பேச்சாளர் கல்யாண சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.