பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கையெழுத்து இயக்கம்

78பார்த்தது
2012 ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களில் பணிபுரியும் 12 ஆயிரம் பேர் தங்களை திமுகவின் 2016 மற்றும் 2021 தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முதல்வரின் கவனத்தை ஈர்க்க, தமிழ்நாடு தழுவிய கையெழுத்து இயக்கத்தை இன்று தருமபுரியில் தொடங்கி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து
செய்தியாளர்களிடம் பேசிய
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:
முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
இந்த நேரத்தில் கலைஞர் அவர்கள் 2016 சட்டமன்ற தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்து இருந்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

ஏற்கனவே 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு,
பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்த திமுக ஆட்சியில் இந்த ஆண்டு வழங்கிய 2500 ரூபாய் சம்பள உயர்வால் கிடைக்கின்ற,
தற்போதைய 12, 500 ரூபாய் சம்பளம் இந்த காலத்தில் குடும்பத்தை நடத்த போதாது என்பதை, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி