தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்து கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்கள் கோழி வளர்ப்பில் ஈடுபட நாட்டின கோழிக் குஞ்சுகளை 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். பயனாளி முந்தைய 100 பயனாளிகள் வீதம் தேர்வு ஆண்டுகளில் இலவச கறவை ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு செய்யப்பட உள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள், விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊன முற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்கு முக்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் மாடு ஆடு, கோழிப்பண்ணை திட்டங்களில் பயனடைந்திருக்க கூடாது. இந்த திட்டத்தில் பயன் பெற தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகங்களில் சமர்ப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு கால்நடை பராமரிப்புதுறை மண்டல இணை இயக்குனர் அலுவலகம், தர்மபுரி, அரூரில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.