அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி ஈடுபட்டிருப்பதாக வெளியான செய்தியை வைத்தும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதை வைத்தும், அதிமுக ஒன்றிணைந்து விடுமோ என திமுக அச்சமடைந்துள்ளது. அதன் பேரில் தான் இருவர் மீதும் திமுக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது என ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “அதிமுக ஒன்றிணையாவிட்டால் வெற்றிப் பெற்று விடலாம் என திமுக கனவு காண்கிறது. அவரது கனவு நிச்சயம் பலிக்காது” என்றார்.