மகிளா காங்கிரஸ் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

53பார்த்தது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் சார்பாக மாநிலம் முழுவதிலும் உள்ள உயர் கல்வி பயிலும் ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை, MLA அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட பொறுப்பாளாருமான தீர்த்தராமன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் காளியம்மாள் தலைமையில் நேற்று செப்டம்பர் 7 மாலை தர்மபுரி மகிளா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 6 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ. 40000/- என்று கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி