தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற மற்றும் வெற்றிலை விற்பனைக்கு என பிரத்தியேகமாக வாரச்சந்தை நடைபெறுவது வழக்கமாக உள்ளது இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 08 நடைபெற்ற வெற்றிலை வாரச் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களான கிருஷ்ணகிரி நாமக்கல் திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வெற்றிலைகளை வாங்குவதற்காக வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 9, 000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 20, 000 ரூபாய் வரை விற்பனையானது மேலும் நேற்றைய சந்தையில் 23 வெற்றிலைகள் சுமார் 4, 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.