

தர்மபுரி: கிணற்றில் தவறி விழுந்த 80 வயது மூதாட்டி உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்குச் சேர்ந்த நார்த்தம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மனைவி சரஸ்வதி 80 வயது மூதாட்டி இவர் நேற்று முன்தினம் (பிப்.5) வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் திரும்பவில்லை. அவரைக் குடும்பத்தினர் தேடிய நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை காவலர்கள், அவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதியமான்கோட்டைக் காவலர்கள் வழக்குப் பதிந்து செய்த விசாரணையில் சரஸ்வதி மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது