தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு புழுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வார சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் கால்நடைகளை வாங்குவதற்காக வாரச்சந்திக்கு வந்து செல்வது வழக்கம்.
நேற்று (செப்.4) நடைபெற்ற சந்தைக்கு 200க்கும் மேற்பட்ட மாடுகள் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழி, சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் மாடுகள் 6000 ரூபாய் முதல் 46, 500 ரூபாய் வரையிலும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், எடைக்கு தகுந்தாற் போன்று ரூ.5,500 முதல் ரூ.9,300 வரையிலும் நாட்டுக் கோழிகள், சேவல்கள் 350 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மேலும் நேற்று (செப்.5) ஒரே நாளில் 42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.