தர்மபுரி: கிணற்றில் இறங்கிய சிறுத்தையால் பரபரப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஹள்ளி அருகே சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிநாதன் இவரது 20 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று மாலை 4 மணி அளவில் வித்தியாசமான உருமல் சத்தம் கேட்டது சத்தத்தை கேட்டு அந்த பகுதி மக்களுக்கு சென்று பார்த்த போது சிறுத்தை போன்ற கிணற்றில் உள்ள பாறை இடுக்கில் சுமார் 12அடி உயரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்தனர். இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிணற்றில் விழுந்த சிறுத்தையை மீட்க முயற்சியில் ஈடுபட்ட போது சிறுத்தை கிணற்றில் இருந்து அங்குள்ள பாறை இடுக்குகளில் தாவி குதித்து மேல் நோக்கி வர துவங்கியது. பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் பயந்து சிறுத்தை கிணற்றுக்கு வெளியே குதித்து காட்டுப்பகுதிக்குள் ஓடியது இதனை சற்றும் எதிர்பாராத வனத்துறை யினர் அதிர்ச்சி அடைந்தனர் காட்டுக்குள் ஓடி சிறுத்தை மறைந்தது இருப்பினும் அப்பகுதி தொடர்ந்து வனத்துடன் கண்காணித்து வருகின்றனர் பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டும் எனவும் இரவு நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறித்தினர்.