தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடைபெறுகிறது. இன்று ( நவம்பர் 12 ) கூடிய சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் & வியாபாரிகள் விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர் ஆடுகள் ரகம் மற்றும் அளவை பொறுத்து 2500 ரூபாய்க்கு துவங்கி 20000 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் இன்று ஒரே நாளில் 40 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.