தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் தர்மபுரி மாவட்ட மையத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது அதில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் பணிக்கொடைதல் ஐந்து லட்சம் வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வுதியும் 900 வழங்க வேண்டும் காலி பணியிடங்களை போர்க்கள அடிப்படையில் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் அரசு துறைகளில் காலி பணியிடங்களை தகுதி உள்ள ஊழியர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது இதற்கு தேவகி மாவட்ட தலைவர் தலைமை வகித்தார் வளர்மதி, சங்கீதா, ஜெயலட்சுமி, ஜெயா, மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்