அரூர்: மலைப்பகுதிகளில் வைக்கப்படும் வெடியால் மக்கள் அச்சம்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட தீர்த்தமலை மற்றும் அதன் குறிப்பாக மேல் செங்கப்பாடி கிராமத்தில் இன்று நவம்பர் 13 வெங்கடாசலம், என்பவர் மலை குன்றுகளை வெடிமருந்துகளைப் பயன்படுத்தி வெடித்து கற்களை உடைத்து வருவதால் அந்தப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆதிதிராவிடர் இன மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.