அரூர்: ஆற்றின் உபரிநீரை ஏரிக்கு எடுத்துச் சென்ற விவசாயிகள்

56பார்த்தது
அரூர் மாம்பட்டி ஊராட்சியில் கிராம மக்கள் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை ஜெனரேட்டர் மூலம் பைப்லைன் அமைத்து 400 மீட்டர் தொலைவில் உள்ள தேசபந்து பெரிய ஏரிக்கு தண்ணீரை எடுத்துச் சென்றனர் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இந்த முயற்சியை முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் திமுக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் நேற்று பார்வையிட்டு பாராட்டினார் மேலும் அரசின் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார் இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாய சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி