மருத்துவருக்கு கத்திக் குத்து - இபிஎஸ் கண்டனம்

51பார்த்தது
மருத்துவருக்கு கத்திக் குத்து - இபிஎஸ் கண்டனம்
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுகையில், “மருத்துவர் பாலாஜியை பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கண்டனம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி