தர்மபுரி: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த கனமழை

79பார்த்தது
தமிழகத்தில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்று திசைகளின் மாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பொழிந்துள்ளது.

அதன்படி நவம்பர் 02 நேற்று தர்மபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர், சித்தேரி, பாலக்கோடு, இண்டூர், பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இடைவிடாமல் பொழிந்துள்ளது. இதனால் நீர் நிலைகளில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி