அரூர்: எஸ்பி தலைமையில் பொது மக்கள் குறைத்தீர் கூட்டம்

66பார்த்தது
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தர்மபுரி, பாலக்கோடு
கடத்தூர், தொப்பூர், அதியமான்கோட்டை, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி, வெள்ளிசந்தை போன்ற காவல் நிலையம் உட்பட்ட பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. மேலும் இந்த முகாமில் மொத்தம் 91 மனுக்கள் பெறப்பட்டது இதில் 81 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் காவல் ஆய்வாளர் ரங்கசாமி திரு சரவணன் செந்தில்குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி