தமிழகம் முழுவதும் தற்போது வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிந்து வரும் சூழலில் தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, வெங்கடசமுத்திரம், மாம்பாடி, வேப்பம்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது விடியற்காலை வரை கனமழை பொழிந்து வருகிறது. மேலும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பருவ பயிர்கள் நடவு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.