அரூர்: கம்பைநல்லூரில் 22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

70பார்த்தது
கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நவம்பர் 08 நடைபெற்ற சந்தையில் ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களான திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்றைய சந்தையில் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆடுகள் 5, 000 முதல் 9, 700 வரை 22 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி