தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக மழை இல்லாமல் வெயில் சுட்டரித்து காணப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 30 நேற்று இரவு முதல் அரூர் வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக கோட்டப்பட்டி சிட்லிங் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாகவும் காற்று திசைகளின் மாற்றம் காரணமாகவும் தர்மபுரி மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் அரூர் சுற்றுவட்டாரத்தில் பொழிந்த கனமழையால் நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பியது. மேலும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நலன் கருதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் தீபாவளி பண்டிகை கொண்டாட உற்சாகமாக இருந்த பொதுமக்கள் சற்று அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.