அரூர்: புளுதியூரில் 48 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

75பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடை விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரசந்தை நடை பெற்று வருகிறது. நேற்று நவம்பர் 06 நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களான, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணா மலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த சந்தையில் மாடுகள் 8, 200 முதல் 42, 500 வரையும், ஆடுகள் 4, 500 முதல் 8, 800, நாட்டுக்கோழிகள் 300 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரையில் என 48 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி