தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அரூர் பேரூராட்சி கீழ் இயங்கும் பேருந்து நிலையம் பேருந்துகள் உள்ளே வந்து செல்ல போது இட வசதி இல்லாததால் சிரமத்துடன் இயக்கப்பட்டு வந்ததை அடுத்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அரூர் பழைய பேருந்து நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதியதாக கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அமைச்சர்கள் கே. என். நேரு, எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ஆகியோர் அரூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர். ஆனால் நிர்வாக காரணங்களுக்காக பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்தநிலையில், இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டு பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.