சேலத்தை சேர்ந்த விமல்ராஜ் (45) திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் முக்கிய பொறுப்பில் இருந்தார். இவர் நேற்று (நவ. 12) தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில், விமல்ராஜ் பலரிடம் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி இருந்த நிலையில் வட்டி கட்ட முடியாமல் இருந்தது தெரியவந்தது. சிலர் பணத்தைத் திருப்பி கேட்டு அவரை மிரட்டியுள்ளனர். இதையடுத்து அவர் மனைவி ரதீனா சொன்ன தகவலின்படி 6 பேரிடம் போலீசார் விசாரிக்கவுள்ளனர்.