இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப் படுகிறது. தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பூக்களின் விலை உயர்ந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் பொதுமக்கள் அதி களவில் பூக்களை வாங்கிச் சென்றனர். குறிப்பாக சிறு வியாபாரிகள் பூக்களை வாங்க மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் பூக்களை பூமார்க்கெட்டில் விற்பனை களை கட்டியது நாளை (வெள்ளிக்கிழமை) கவுரி விரதம் கடை பிடிக்கப்படும் நிலையில் சாமந்தி பூக்களின் விற்பனையும் அதிகரித்தது.
தர்மபுரி பூமார்க்கெட்டில் விற்பனையான பூக்களின் விலை கிலோவில் வருமாறு, குண்டு மல்லி கிலோ 1, 000 ரூபாய், சன்ன மல்லி 900 ரூபாய், கனகாம்பரம் 560 ரூபாய், ஜாதி மல்லி 1000 ரூபாய், காக்கட்டான் 800 ரூபாய், கலர் காக்கட்டான்
800 ரூபாய், நாட்டு சாமந்தி
150 ரூபாய், ஹைப்ரேட் சாமந்தி 120 ரூபாய், சம்பங்கி
120 ரூபாய், பன்னீர் ரோஸ் 120 ரூபாய் என விற்பனையானது.