தருமபுரி ஆசிரியர் காலனி நஞ்சப்பா கவுண்டர் தெருவை சேர்ந்த மருத்துவர் சீதாபதி, இவரது வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹுண்டாய் காரை வெளியில் காரில் செல்வதற்கு ஆன் செய்த போது காரில் இருந்து ஏதோ சத்தம் கேட்ட நிலையில் திடீரென தீப்பிடித்து மலமல வென் எரிய தொடங்கியது.
ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான ஹூண்டாய் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் எரிவாயு மூலம் இயங்கி வந்த இந்த கார் திடீரென தீப்பிடித்ததால் தொடர்ந்து அவர் அங்கிருந்து காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர் , கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து தருமபுரி நகர காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.