தர்மபுரி: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு பெண்கள் போராட்டம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வரு கிறது. இந்த கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து அந்த கடையை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து பையர்நத்தம் பெட்ரோல் பங்க் பகுதியில் கடை வைக்க அதிகாரிகள் முடிவு செய்த போது அதற்கும் எதிர்ப்பு எழுந்தது. டாஸ்மாக் கடையில் பணிபுரியும் கதிரிபுரத்தை சேர்ந்த குமார் வீட்டின் அருகில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்த னர். இதற்கு கதிரிபுரம் ஊர் தலைவர் ராஜி தலைமையில் அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கதிரிபுரம் - மெணசி ரோட்டில் குமார் வீட்டின்மு ன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குவந்த முன்னாள் எம். எல். ஏ. வேலுசாமி, பா. ம. க. மாவட்ட செயலாளர் அர சாங்கம், மாநில நிர்வாகிகள் செந்தில், சிவக்குமார் உள்ளிட்ட பாமகவினர் டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பொம்மிடி உதவி காவல் ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவலர்கள் போராட் டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின் கூட்டத்தை கலைத்தனர்.