இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தனது பழைய நண்பர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோர் தன்னை ஏமாற்றியதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தோனி நேரில் வந்து பதில் அளிக்குமாறு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் தோனியின் பெயரில் கிரிக்கெட் பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.