அரூர்: திமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் அறிக்கை
தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக. செயலாளரும், முன்னாள் உயிர் கல்வித்துறை அமைச்சருமான முனைவர். பழனியப்பன் இன்று நவம்பர் 25 வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக துணை முதல்வரும், இளைஞர் அணி செயலாளருமான உதய நிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாளை மறுநாள் தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம், மாணவ- மாணவிக ளுக்கு இலவச நோட்டு-புத்தகம், எழுது பொருட்கள் உள்ளிட்ட பல் வேறு நல உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் இந்நாளில் ஆதரவற்றோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட நல உதவிகளும் வழங்க வேண்டும். இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள், இளைஞரணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.