தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி வேடக்கட்டமடுவு கிராமத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 120 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலத்தை அளந்து இணையவழியில் சிட்டா வழங்கும் பணி பல நாட்களாக கிடப்பில் இருந்த நிலையில், பொதுமக்கள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நவம்பர் 21 நேற்று அந்த நிலத்தை அளந்து இணையவழி சிட்டா கணக்கில் ஏற்றும் பணிக்கு அளவீடு செய்யும் பணியினை அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.