வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக பாலக்கோடு, அரூர், கோட்டப்பட்டி, மாரண்டஹள்ளி, தீர்த்தமலை கம்பைநல்லூர், ஒகேனக்கல், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் தற்போது வரை இடைவிடாத கனமழை பொழிந்துள்ளது. இந்த நிலையில் இன்று நவம்பர் 17 பதிவான மழை விவரம், தருமபுரி 02 மி. மீ, ஒகேனக்கல் -24 மி. மீ, பாலக்கோடு 10. 2 மி. மீ, மாரண்டஹள்ளி 17. 2 மி. மீ, அரூர் - 08 மி. மீ, பாப்பிரெட்டிப்பட்டி - 1. 2 மி. மீ, கம்பைநல்லூர் - 13 மி. மீ, தீர்த்தமலை -22 மி. மீ என மழை பதிவாகியுள்ளது.