அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை நாட்களில் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது.
இந்த சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை, இறைச்சி மாடு, ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வரு கின்றனர். வெளி மாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்நடைகளை வாங்க வருகின்றனர். நேற்று நவம்பர் 13, நடைபெற்ற சந்தையில் சராசரியாக மாடு 5, 500 முதல் 46, 000 வரையும், ஆடுகள் 5, 200 முதல் 11, 500 வரை விற்பனையானது. நேற்றைய சந்தையில் 41 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.