இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் படைவீரர்களை ஆவின் பாலக முகவர்களாக நியமித்திட பொது மேலாளர் பொறுப்பு, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் விற்பனை பிரிவு, கூட்டாண்மை அலுவலகம், நந்தனம், சென்னை அவர்களின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு என ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஆவின் பாலக முகவர்" நியமனமானது ஆவின் நிறுவன இணையதளத்தில் (www. aavinmilk. com) (Vacant) பாலகம் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்பட்டு பாலக முகவர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். "ஆவின் பாலக முகவர்களாக" விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் பாலகத்திற்குண்டான விண்ணப்பப் படிவம் (www. aavinmilk. com) என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விற்பனைப்பிரிவு நந்தனம், தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் உடன் விண்ணப்பித்து பயனடையலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி, தெரிவித்துள்ளார்.