அரூர்: மருத்துவமனையின் தரம் குறைப்பு இணை இயக்குனர் அறிவிப்பு

59பார்த்தது
தருமபுரி, பென்னாகரம் மெயின் ரோடு, எண். 486A-ல் உள்ள தனியார் (விஜயா) மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், கடந்த வாரம் பிரசவத்தின் போது தாய், சேய் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவமனையில் குறைக்கப்பட்டுள்ளது.
இதில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டதில், Level-III என்கிற Super Specialty தகுதி வழங்கப்பட்டது. தற்காலிகமாக மகப்பேறு மரணம் நிகழ்வுகளின் அடிப்படையிலும், Level-III யிலிருந்து Level-ll ற்கு (Down grade) தரம் குறைத்து மருத்துவ துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி நேற்று உத்திரவிட்டுள்ளார்.

இனி மகப்பேறு(ICU) தீவிர சிகிச்சையளிக்க கூடாது, இருதயம் தொடர்பான சிகிச்சை, டெங்கு, மஞ்சள் காமாலை உள்ளிட்டவை களுக்கு சிகிச்சை வழங்க கூடாது. மேலும் மகப்பேறு மருத்துவரை கூடுதலாக பணியமர்த்தி பிரசவம் பார்க்க வேண்டும் என மருத்துவமனைக்கு அறிவுறுத்தியுள்ளார். மீண்டும் 6 மாத காலத்திற்கு பிறகு மகப்பேறு சிகிச்சைகளின் தரம் மற்றும் மகப்பேறு மரணத்தின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு மீண்டும் தேவைப்படின் Level-III தரம் உயர்த்தப்படும் மருத்துவத் துறை இணை இயக்குனர் மருத்துவர் எம். சாந்தி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி