தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையத்திலும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 2025 ஜனவரி 01 ஆம் நாளை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பும் அனைவரின் பெயரை சேர்க்கவும், பெயர் திருத்தம், பெயர் நீக்கம், மற்றும் தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக நேற்று மற்றும் இன்று (நவம்பர் 24) தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி வட்டம், அதகப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் கி. சாந்தி பார்வையிட்டார். இதில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உடன் இருந்தனர்.