தர்மபுரி மாவட்ட கூட்டுறவுத் துறை 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இரத்ததான முகாம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் கூட்டுறவு துறை சார்ந்த அலுவலர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் முகாமில் கலந்துக்கொண்டு இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் சரவணன் மண்டல இணைப்பதிவாளர், மலர்விழி தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர், பிரேம் பாலசுப்பிரமணியன் அன்பழகன் துணைப் பதிவாளர்கள், மருத்துவர் கன்னியா உதவி பேராசிரியர் ரத்த வங்கி மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.