தர்மபுரி: ஆக்கிரமிப்பு வாகனங்களால் பொதுமக்கள் அவதி

64பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் புதிய பேருந்து நிலைய பகுதியில் நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியூர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்து நிறுத்தமிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் மிதிவண்டிகள் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்து வருவதால் உள்ளே வந்து செல்லும் பேருந்துகள் நிறுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாவதால் பெரும்பான்மையான பேருந்துகள் நிற்காமல் வந்தவுடன் புறப்பட்ட செல்கின்றது. இதனைத் அவல நிலை மாற சமூக ஆர்வலர்கள் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி